திங்கள், அக்டோபர் 16, 2006

தீபாவளி விளம்பரங்கள்

அமெரிக்க கம்பெனிகள் தங்களை டிவியில் விளம்பரப்படுத்திக்கொள்ள SUPER BOWL
எனப்பபடும் விளையாட்டின் நேரடி ஒளிபரப்பில் பங்கு கொள்கின்றன. அந்த
விளம்பரங்களை ஆய்வு செய்ய,Top 10, Worst 10 என தரம் பிரிக்க, எல்லா
வகையான நையாண்டி செய்ய பாரட்ட என தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு
விருந்து தான். ஒரு பொருளை விட அதிகமாக அதை விளம்பரபடுத்த புதிது புதிதாக
வித்தியாசமாய் செய்ய வேண்டியிருக்கிறது.

தீபாவளிக்கு இந்தியாவிலும் அந்த போக்கு தொற்றிக்கொண்டுவிட்டது. நம்மூர்
தொலைக்காட்சிகளில் சேலை விளம்பரங்கள் தான் அதிகம். ஒரு ஊரில் மட்டுமே கிளை
இருந்தாலும் தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் தான் கூட்டம் கூடுகிறது என்பதால்
அவர்களின் வரவும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டபுள் மீட்டர் தான்! :)

அவற்றில் எனக்குப் பிடித்த சில:
1. விழுப்புரம் மகாலஷ்மி (அருமையான பாட்டு)
2. SriDevi collections (குஷ்பு - புது உற்சாகம்)
3. சரவணா ஸ்டோர்ஸ் (ஸ்நேகா - ஆடை, புத்தாடை, பட்டாடை)
4. போத்தீஸ் (சுதா ரகுநாதன் - நெஞ்சாங் கூட்டில்)
5. கணபதி சில்க்ஸ் (அந்த பெண்னின் பெப்ஸி உமாவைப் போல செய்வது அழகு)
6. ராசி லேகா கலெக்ஷ்ன்ஸ்
7. நாயுடு ஹால்
8. கோல்டு வின்னர்

பிடிக்காத சில:
1.Lakshmi silks (ரேணுகா மேனன்)
2.Co-optex
3.ரேணுகா கலெக்ஷ்ன்ஸ்

பரவாயில்லை ரகம்
1. Preethi
2. Amirtha
3. Aircell
4. சென்னை சில்க்ஸ்

(அப்பாடி! பதிவு எண்ணிக்கையை கூட்டியாச்சு...)

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

(அப்பாடி! பதிவு எண்ணிக்கையை கூட்டியாச்சு...)


:-)))

Boston Bala சொன்னது…

'விழுப்புரம் மகாலஷ்மி' எனக்கும் பிடித்திருந்தது. ஆசையாய், விருந்தினர்கள் வந்திருந்தபோது விளம்பரத்தை ஓட விட்டு வாக்கெடுப்பு நடத்தினேன்.

முடிவு: பெண்களுக்கு ரசிக்கவில்லை! ஆண்களைக் கவர்ந்திருந்தது : )