புதன், ஜூலை 26, 2006

கறை நல்லது

விளம்பரங்கள் தான் இன்றைக்கு டிவி தொடர்களை விட நன்றாக இருக்கிறது.
 
வருடங்கள் தாண்டியும் கதையை இழுக்கின்ற வாய்ப்புகளின்றி (இதுவும் சவாலான விஷயம் தான்)  நொடிப்பொழுதில் ஒரு கதை சொல்லி தங்கள் பொருளையும் பார்ப்பவர்கள் மனதில் நிற்கச் செய்ய அசாத்திய திறமை வேண்டும்.
 
சோப்புத்தூள் நிறுவனங்களில் "நிர்மா", "ஏரியல்" போன்ற நிறுவனங்களை ஏறக்குறைய காணாமலேயே போகச்செய்துவிட்ட "Surf-Excel" தயாரிக்கும் ஹிந்துஸ்த்தான் லீவரின் விளம்பரங்கள் அதற்கான காரணத்தை சொல்லும்.
 
இரு குழந்தைகள் விளையாடும், கிரிக்கெட் ஆடிவிட்டு திரும்பும் பொடியன் என்ற வரிசையில் இன்று ஷீ லேஸ் கட்டும் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 
"பொதுக்" என்று கொழுக்கும்  மொழுக்கமாய் எல்லோரும் குட்டீஸில் விரும்பும் உடல் வாகுடன் போராடி ஷீ லேஸ் கட்டிக்கொள்ள கற்கும் சிறுவன் விளம்பரம் "கறை நல்லது" அதற்காக உங்கள் குழந்தையை அழுக்காக்கி விட்டாய் என மொக்காதீர்கள் என ஒரு பாஸிட்டிவான மெஸேஜையும் சொல்கிறது.
 
கண்டிப்பாக பாருங்கள்.

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

3 கருத்துகள்:

யாத்ரீகன் சொன்னது…

அருமையான விளம்பர தொடர் அது... அதோடு.. "சாரி சொல்லிடுச்சு.." என்று தங்கையிடம் சொல்லும் அருமை அண்ணனும் அழகு.. :-)

ENNAR சொன்னது…

good
நன்று

மு.கார்த்திகேயன் சொன்னது…

Daya, Thanks for visiting my blog...

Naan vilambarangalukkakave TV parpathundu