எத்தனையோ தமிழ் தொலைக்காட்சிகள் வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் செய்யாததை, விஜய் டிவி தொடர்ந்து செய்து கொண்டிருக்க்கிறது. நடுவராக நெல்லை கண்ணன். நெல்லை கண்ணன் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும் வித்தியாசமானவர். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்.
பட்டிமன்ற ராஜாவை சிறப்பு விருந்தினராக கொண்டு புதிய கால தொடர் தொடங்கியிருக்கிறது.
அரட்டை அரங்க திடீர் பேச்சாளர்களை கண்டு ஓடும் நிலையில் இந்த நிகழ்ச்சி உண்மையிலே வரம் தான்.
இந்த தொகுப்பில் செல்பேசி, அறிவியல் வளர்ச்சியின் தாக்கம், இன்றைய இளைஞர்களின் நாட்டுப்பற்று மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என வெவ்வேறு தலைப்புகளில் அசத்தி விட்டார்கள் பேசியவர்கள்.
ராணுவ வீரனின் மரணம் தியாகம் பெரிய விசயமில்லை என தவறாக பொருள் படும் படி பேசியவரை ஒரு ஆசிரியராக கண்டிப்புடன் திருத்தி (ஆச்சர்யம்: பேசியவரும் ஆசிரியர் தான்) மேடை பேச்சுக்கு வேண்டிய கவனத்தை உணர்த்தினார் நெல்லை கண்ணன்.
அதே வேளையில் நடந்த விசயங்களை மேற்கோள் காட்டுகையில் உள்ள திரிதலையும் சுட்டிக்காட்டினார்.
அறிவியல் வளர்ச்சியின் தாக்கம் பற்றி பேசியவர் உலக அரசியலயையும் தொட்டு பேசினார். செல்லப் பையனும் குட்டி பையனும் துணுக்கு அருமை.
அதிகமாக உணர்ச்சி வச்சபட்டதானலையோ என்னவோ எதிர்வாதம் செய்தவரை எள்ளல் செய்தார். தவிர்த்திருக்கலாம்.
பேசியவரின் ஆளுமையும், பேச்சு நடையும், நினைபபாற்றலும் வைகோவை ஞாபக படுத்தியது. நெல்லை கண்ணன் அழுதே விட்டார், ஆனந்தத்தில் அவரை ஆற கட்டி தழுவிக்கொண்டார்.
தமிழ் ஆர்வம் உள்ள எவரும் காண வேண்டிய நிகழ்ச்சி இது. கண்டிப்பாக பாருங்கள்.
இந்த நிகழ்ச்சி நீண்ட காலம் தொடர வேண்டும்.
http://www.thiraivirunthu.com/video/thamizh-pechu-engal-moochu-episode-5/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
ஜெயா தொலைக்காட்சியில் 'சொக்குதே மனம்' என்ற நிகழ்ச்சியில் மட்டும் ஆங்கிலக்கலப்பற்ற தமிழில் பேசுகிறார்கள். ஆனால் மருத்துவர் தமிழ்குடிதாங்கியின் 'மக்கள் தொலைக்காட்சி'யில் தான் உண்மையில் 100 வீதமும் தமிழில் பேசுகிறார்கள்.
மிக அருமையான நிகழ்ச்சி.. நானும் தவறாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி..
திரு. நெல்லைக்கண்ணன் அவர்களின் அறிவு ஞானம் அளவிடற்கரியது. ஆனால் சில சமயம் பேச்சாளர்களைப் பேச விடாமல் அடிக்கடி இடை மறிக்கிறார் என்று நான் கருதியதுண்டு.. இந்தப் பகுதியைப் பார்த்ததும், பேச்சாளர்கள் தவறான செய்தியைச் சொல்லிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையினால் தான் அவ்வாறு இடைமறிக்கிறார் என்பது புரிகிறது.
வை.கோ. போல பேசும் அந்த இளைஞருக்கு நல்ல எதிர் காலம் உள்ளது.
பகிர்ந்தமைக்கு நன்றி!
மிக அருமையான நிகழ்ச்சி.. நானும் தவறாமல் பார்த்து கொண்டு இருந்த நிகழ்ச்சி.
இப்பொழுது தொடர்ச்சியாக என்னால் பார்க்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் இயங்கும் ஒரே தொலைக்காட்சி “மக்கள் தொலைக்காட்சி” மட்டுமே. இதை உண்மையான தமிழின உணர்வாளர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்.
அதற்கு அடுத்தபடியாக சமூகப்பொறுப்போடும் நடுநிலையாகவும் திரைப்படம், தொடர் என பொதுவான தொலைக்காட்சியாக இருப்பது “விசய் தொலைக்காட்சி”. இதில் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சி மிகச்சிறப்பு.
முத்தமிழையும் விற்று தமிழனை தொலைக்காட்சியில் அடகுவைத்து காசுபார்க்கும் கயவர்களையும், தமிழின துரோகிகளையும் வேரடி மண்ணோடு பிடிங்கி எறிய தமிழர்கள் அனைவரும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.
here is the link for all episodes in good quality.
http://www.metacafe.com/tags/tamil_pechu/
here is the link for
திரு. நெல்லைக்கண்ணன்'s blog
http://thamizhkadal.blogspot.com/
நன்றி அனானி. சொக்குதே மனம் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிறது. அப்போதே இந்நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
அனானி, கரிகாலன்:
மக்கள் தொலைக்காட்சியும் அருமை. சொல் விளையாட்டு, தமிழ் பேசு தங்க காசு என விளையாட்டு நிகழ்ச்சிகள் ரசிக்க முடிகிறது. தொழில் நுட்பத்திலும் வரைகலையிலும் புதுமை தெரிகிறது. தமிழ் சொல் அறிவு நமக்கு வளர்கிறது. அதே சமயத்தில் சீருந்து, கன ஊர்ந்து என எழுத்து தமிழை அதிகமாக பேசுவதால் ஒரு அந்நியத்தனம் தெரிகிறது. அதோடு அவர்கள் சொல்வதே தமிழ் என ஒரு வகையான ஆதிக்கம் தெரிகிறது.
நன்றி தமிழ் நெஞ்சன், அந்த தொடுப்புகளுக்கு. சூர்யா, இரவு கவி க்கும் நன்றி. பல தொகுப்புகள் இனையத்தில் கிடைக்கிறது.
கருத்துரையிடுக