வியாழன், ஜூலை 23, 2009

விகடன் இனைய தளம்

விகடன் இனைய தளம் Hack செய்யப்பட்டு விட்டதா ?

Www.vikatan.com என்று டைப் செய்தால் Network solutions என்ற முகவரிக்கு செல்கிறது.

திங்கள், பிப்ரவரி 23, 2009

கதிர் வேலனே!

சனி, பிப்ரவரி 21, 2009

டில்லி 6

டில்லி 6 

அருமையான படம். 
ஒரு கருப்பு குரங்கு தான் படத்தின் நாயகன். 

கதை? காதல் கதை தான். அது எதுக்குங்க? 

நியூ யார்க் டில்லியாக மாறும் பாடல் படமாக்கப்பட்ட விதம். வாவ்! 

வாழைபழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி படத்தின் செய்தியை சொல்லி விடுகிறார்கள். 
ஏ. ஆர். ரகுமான். படம் முடிந்தவுடன் எழுந்து வந்து விடாதீர்கள். முழு பாடல் காத்திருக்கிறது. 

டில்லி சலோ! சலோ! ஆர்பாட்டமில்லாமல்.... புறப்படுவதற்கு முன் கண்ணாடியில் முகம் பார்த்துக்கங்கோ!

ஞாயிறு, ஜனவரி 11, 2009

A.R Rahuman won Golden Globes

a.r. rahuman won Golden Globe awards for his music score in the movie Slumdog Millionaire.

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2008

விஜய் டிவி - தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

எத்தனையோ தமிழ் தொலைக்காட்சிகள் வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் செய்யாததை, விஜய் டிவி தொடர்ந்து செய்து கொண்டிருக்க்கிறது. நடுவராக நெல்லை கண்ணன். நெல்லை கண்ணன் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும் வித்தியாசமானவர். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்.

பட்டிமன்ற ராஜாவை சிறப்பு விருந்தினராக கொண்டு புதிய கால தொடர் தொடங்கியிருக்கிறது.

அரட்டை அரங்க திடீர் பேச்சாளர்களை கண்டு ஓடும் நிலையில் இந்த நிகழ்ச்சி உண்மையிலே வரம் தான்.

இந்த தொகுப்பில் செல்பேசி, அறிவியல் வளர்ச்சியின் தாக்கம், இன்றைய இளைஞர்களின் நாட்டுப்பற்று மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என வெவ்வேறு தலைப்புகளில் அசத்தி விட்டார்கள் பேசியவர்கள்.

ராணுவ வீரனின் மரணம் தியாகம் பெரிய விசயமில்லை என தவறாக பொருள் படும் படி பேசியவரை ஒரு ஆசிரியராக கண்டிப்புடன் திருத்தி (ஆச்சர்யம்: பேசியவரும் ஆசிரியர் தான்) மேடை பேச்சுக்கு வேண்டிய கவனத்தை உணர்த்தினார் நெல்லை கண்ணன்.
அதே வேளையில் நடந்த விசயங்களை மேற்கோள் காட்டுகையில் உள்ள திரிதலையும் சுட்டிக்காட்டினார்.

அறிவியல் வளர்ச்சியின் தாக்கம் பற்றி பேசியவர் உலக அரசியலயையும் தொட்டு பேசினார். செல்லப் பையனும் குட்டி பையனும் துணுக்கு அருமை.
அதிகமாக உணர்ச்சி வச்சபட்டதானலையோ என்னவோ எதிர்வாதம் செய்தவரை எள்ளல் செய்தார். தவிர்த்திருக்கலாம்.

பேசியவரின் ஆளுமையும், பேச்சு நடையும், நினைபபாற்றலும் வைகோவை ஞாபக படுத்தியது. நெல்லை கண்ணன் அழுதே விட்டார், ஆனந்தத்தில் அவரை ஆற கட்டி தழுவிக்கொண்டார்.

தமிழ் ஆர்வம் உள்ள எவரும் காண வேண்டிய நிகழ்ச்சி இது. கண்டிப்பாக பாருங்கள்.

இந்த நிகழ்ச்சி நீண்ட காலம் தொடர வேண்டும்.

http://www.thiraivirunthu.com/video/thamizh-pechu-engal-moochu-episode-5/

திங்கள், அக்டோபர் 16, 2006

தீபாவளி விளம்பரங்கள்

அமெரிக்க கம்பெனிகள் தங்களை டிவியில் விளம்பரப்படுத்திக்கொள்ள SUPER BOWL
எனப்பபடும் விளையாட்டின் நேரடி ஒளிபரப்பில் பங்கு கொள்கின்றன. அந்த
விளம்பரங்களை ஆய்வு செய்ய,Top 10, Worst 10 என தரம் பிரிக்க, எல்லா
வகையான நையாண்டி செய்ய பாரட்ட என தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு
விருந்து தான். ஒரு பொருளை விட அதிகமாக அதை விளம்பரபடுத்த புதிது புதிதாக
வித்தியாசமாய் செய்ய வேண்டியிருக்கிறது.

தீபாவளிக்கு இந்தியாவிலும் அந்த போக்கு தொற்றிக்கொண்டுவிட்டது. நம்மூர்
தொலைக்காட்சிகளில் சேலை விளம்பரங்கள் தான் அதிகம். ஒரு ஊரில் மட்டுமே கிளை
இருந்தாலும் தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் தான் கூட்டம் கூடுகிறது என்பதால்
அவர்களின் வரவும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டபுள் மீட்டர் தான்! :)

அவற்றில் எனக்குப் பிடித்த சில:
1. விழுப்புரம் மகாலஷ்மி (அருமையான பாட்டு)
2. SriDevi collections (குஷ்பு - புது உற்சாகம்)
3. சரவணா ஸ்டோர்ஸ் (ஸ்நேகா - ஆடை, புத்தாடை, பட்டாடை)
4. போத்தீஸ் (சுதா ரகுநாதன் - நெஞ்சாங் கூட்டில்)
5. கணபதி சில்க்ஸ் (அந்த பெண்னின் பெப்ஸி உமாவைப் போல செய்வது அழகு)
6. ராசி லேகா கலெக்ஷ்ன்ஸ்
7. நாயுடு ஹால்
8. கோல்டு வின்னர்

பிடிக்காத சில:
1.Lakshmi silks (ரேணுகா மேனன்)
2.Co-optex
3.ரேணுகா கலெக்ஷ்ன்ஸ்

பரவாயில்லை ரகம்
1. Preethi
2. Amirtha
3. Aircell
4. சென்னை சில்க்ஸ்

(அப்பாடி! பதிவு எண்ணிக்கையை கூட்டியாச்சு...)

புதன், ஜூலை 26, 2006

கறை நல்லது

விளம்பரங்கள் தான் இன்றைக்கு டிவி தொடர்களை விட நன்றாக இருக்கிறது.
 
வருடங்கள் தாண்டியும் கதையை இழுக்கின்ற வாய்ப்புகளின்றி (இதுவும் சவாலான விஷயம் தான்)  நொடிப்பொழுதில் ஒரு கதை சொல்லி தங்கள் பொருளையும் பார்ப்பவர்கள் மனதில் நிற்கச் செய்ய அசாத்திய திறமை வேண்டும்.
 
சோப்புத்தூள் நிறுவனங்களில் "நிர்மா", "ஏரியல்" போன்ற நிறுவனங்களை ஏறக்குறைய காணாமலேயே போகச்செய்துவிட்ட "Surf-Excel" தயாரிக்கும் ஹிந்துஸ்த்தான் லீவரின் விளம்பரங்கள் அதற்கான காரணத்தை சொல்லும்.
 
இரு குழந்தைகள் விளையாடும், கிரிக்கெட் ஆடிவிட்டு திரும்பும் பொடியன் என்ற வரிசையில் இன்று ஷீ லேஸ் கட்டும் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 
"பொதுக்" என்று கொழுக்கும்  மொழுக்கமாய் எல்லோரும் குட்டீஸில் விரும்பும் உடல் வாகுடன் போராடி ஷீ லேஸ் கட்டிக்கொள்ள கற்கும் சிறுவன் விளம்பரம் "கறை நல்லது" அதற்காக உங்கள் குழந்தையை அழுக்காக்கி விட்டாய் என மொக்காதீர்கள் என ஒரு பாஸிட்டிவான மெஸேஜையும் சொல்கிறது.
 
கண்டிப்பாக பாருங்கள்.

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

சொக்குதே மனம்.

ஜெயா டிவிக்கு சன் டிவீயளவுக்கு பார்வையார்கள் இல்லையென்றாலும் பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.
 
அதில் ஒன்று:
 சனிக்கிழமை தோறும் இரவு ஒன்பதரை மணிக்கு ஜி.வி பிலிம்ஸ் தயாரிப்பில் "சொக்குதே மனம்" என்ற தலைப்பில்  பழைய திரைப்பட பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து மெல்லிசை பாடல்கள் பாடுவோரை கொண்டு பாடப்பெற்று இடைஇடையே அந்த பாடலின் காட்சியையும் கோர்த்து ஒரு நல்ல தொடராக இருக்கிறது.
 
எப்போதும் புன்னகையுடன் சில பாடல்களை பாடியும் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்குகிறார் ப்ரியா.
பழைய பாடல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் விருந்து தான்.
 

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com