வியாழன், ஏப்ரல் 13, 2006

விகடனில் ஜெ-வைகோ கார்ட்டூன்

நீண்ட நாளைக்கு பிறகு சிரிப்பு மட்டுமே வருகிற மாதிரியாக கார்ட்டூன் போட்டிருக்கிறார்கள். ஹரனாமே! மதன் எங்கே?

(விகடன் கார்ட்டூனில் எப்போதுமே மதன் தான் இடம்பெறுவார். இந்த படத்தின் ஸ்டைலும் அதை ஒத்திருக்கவே கையெழுத்தை கவனிக்காமல் மதன் என பதித்து விட்டேன். சுட்டிக்காட்டிய காரத்திகேயன்,சுதர்ஸன்,தமியனுக்கு நன்றி.

புதிய வரவான கார்ட்டூனிஸ்ட் ஹரனை வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம்.)




ஜாலி விலாஸில் திமுகவிற்கு ஆதரவாக அசின் த்ரிஸா நயன்தாரா என எல்லோரையும் அமுக்கி விடுகிறார்கள்.
இதில் நயன்தாரா விருத்தாசலத்தில் கேப்டனுக்கு எதிராக பாடுகிறாராம்.

ஓரு வாக்கு கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
உன்னை நாக் அவுட் பண்ண நேரம் தான் பார்த்திருந்தேன்
சூரியனுக்கு ஓட்டுத்தான் கேட்டிடுவேன்
உன் சேப்புக் கண்ணில் விரல் விட்டு ஆட்டிடுவேன்


சிரிச்சு சிரிச்சு....தேர்தல் நமக்கு ஓரு பொழுதுபோக்கு!

நன்றி: ஆனந்த விகடன்

1 கருத்து:

வானம்பாடி சொன்னது…

நல்ல கார்ட்டூன். ஆனால் இதை வரைந்தது மதன் இல்லையே..