புதன், ஏப்ரல் 12, 2006

கன்னட உலகின் ஐகான் - ராஜ்குமார் காலமானார்

பழம்பெரும் நடிகரும் கர்நாடாகாவின் ஐகானுமான ராஜ்குமார் இன்று பிற்பகல் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ஆர் போல கர்நாடக சினிமா உலகிற்கு ராஜ்குமார் முக்கியமானவர். அரசியலில் ஈடுபட வில்லையென்றாலும் அரசியலில் முக்கியமானவர்.

கடந்த வருடங்களில் கர்நாடகாவில் வேறு மொழி படங்களை திரையிடக்கூடாது என்ற சர்ச்சையில் சினிமா தயாரிப்பாளர்களான ராஜ்குமார் குடும்பமும் இதற்கு காரணம் என பேசப்பட்டது.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//கடந்த வருடங்களில் கர்நாடகாவில் வேறு மொழி படங்களை திரையிடக்கூடாது என்ற சர்ச்சையில் சினிமா தயாரிப்பாளர்களான ராஜ்குமார் குடும்பமும் இதற்கு காரணம் என பேசப்பட்டது. //

இது மட்டுமில்லை, காவேரி கலவரங்களின் போது கன்னடர்களை உசுப்பேற்றிப் பல தமிழர்கள் கொல்லப் படவும் காரணமாக இருந்தவர் இவர். இங்கே ஜல்லியடிக்கும் ரமேஸ் அரவிந்த், விஸ்னுவர்த்தன், ஏன் நம்ம சூப்பு நட்சத்திரம் எல்லாரும் இவருக்கு அப்போ ஒத்து ஊதுனவங்க தான்.

இருப்பினும் மனிதன் எனும் தனிப்பட்ட முறையில் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.

தயா சொன்னது…

இதை கேள்வியாக்கி Headlines Todayயின் செய்தி வாசிப்பாளர் ராஜ்குமாருக்கான இரங்கல் செய்தியில் கமலஹாசனை கேட்டார்.

கமல் ராஜ்குமார் தனிப்பட்ட முறையில் தமிழர்-கன்னட பிரச்சினைகளில் தான காயப்பட்டிருப்பதாக சொன்னதாக சொன்னார். He is a not an actor a person with Humility என்று உயர்வாகவே குறிப்பிட்டார்.

ஆம் கர்நாடகத்தின் ஐகான் ஐடல் என போற்றப்படுபவரது மரணம் சோகம் தந்தது.

தயா சொன்னது…

இன்றைக்கு பெங்களுரில் சதாசிவ நகர் மற்றும் மல்லேஸ்வரம் பகுதியில் அவரின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு கடும் ரகளையில் இறங்கினர்.

போலீஸ பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களுடைய ஜுப்புகள் கார்கள் என வரிசையாய் போகி கொண்டாடினார்கள்.

ராஜ்குமாரின் வீட்டை சூழ்ந்து எங்கே வெளியருந்தாலும் ஏறி வீட்டுக்கள் புகுந்தனர் அவரது ரசிகர்கள்.

அவரது உடலை கண்ணாடி பெட்டியில் வைக்காமல் ஸ்டெரெக்செரிலியே அவரது இல்லத்திலிருந்து ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றார்கள். விட்டால் கை காலை தனியாக பிரித்துக் கொண்டு போய்விடுவார்கள் அந்த அளவு கட்டுக்கடங்காத கூட்டம் மற்றும் கல்வீச்சு. வயதான பாட்டி கூட பெரும் பாராங்கல்லை கொண்டு காவல் ஜுப்பை நொருக்குவதை லைவ்வாக பார்க்க முடிந்தது.

90 சதவிகித IT கம்பெனிகள் நாளை (வியாழன்) விடுமுறை அளித்துவிட்டன. ராஜ்குமாரின் வண்ணப் படங்களை பிரிண்ட் அவுட் எடுத்து தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொண்டு வீடு திரும்புகிறார்கள் பெரும்பாலனவர்கள்.

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

தொடர்புடைய சுட்டி:
http://penathal.blogspot.com/2006/04/13-apr-06.html