நாயகனும் நாயகியும் "தற்கொலை" செய்துகொள்கிறார்கள் என்ற முடிவை மட்டும் வைத்துக்கொண்டு இப்படத்தை மற்றுமொறு "பூக்களை பறிக்காதீர்கள்", "புன்னகை மன்னன" என பில்டப் கொடுப்பது கொஞ்சம் ஓவர்.
அண்ணியின் காமம் ஜெயிக்கிறதா தம்பியின் காதல் ஜெயிக்கிறதா என்பது தான் கதை. பார்த்ததும் காதல் என்ற ரகத்தில் படத்தில் காதல் காட்சிகள். பாடல்களும் ஏனோ தானோ ரகம். மின்னலே மற்றும் சேது படப்பாடல்களையும் சேர்த்து படத்தில் நாலு பாடல்கள். புதுமை என்று நினைத்து ஒரு பாடல். சகிக்கவில்லை. யாரும் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் ஆதிவாசி கெட்டப்பில் வந்து ஆடுகிறார்கள். பேசாமல் பாடல் காட்சிகளை கட் செய்து விடலாம். இதனால் முன் பகுதியில் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க அசாத்திய பொறுமை தேவைப்படுகிறது.
பின்பகுதியில் அண்ணியின் துரத்தல் படத்தின் வேகத்தை கூட்டுகிறது. தற்கொலை கூடாது என்ற
லெக்சர் இன்றைக்கு அவசியம் என்றால் "ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாறும் போது தான் அஞ்சு பொண்ணை காதலிச்சு ஏமாந்த கஷ்டம் புரியுது" என்று ஃபீலிங்க்ஸ் விடும் பொழுது சிரிப்பு வருகிறது.
லெக்சர் இன்றைக்கு அவசியம் என்றால் "ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாறும் போது தான் அஞ்சு பொண்ணை காதலிச்சு ஏமாந்த கஷ்டம் புரியுது" என்று ஃபீலிங்க்ஸ் விடும் பொழுது சிரிப்பு வருகிறது.
தற்கொலைக்கு கவுன்ஸிலிங் செய்பவரே தற்கொலைக்கு முயலுகிறார் என்று ஆச்சரிய அளவிலேயே "கவுன்ஸிலிங்" பற்றி பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு மிக பாஸிட்டிவான போராடும் குணம் உள்ள காதலர்களையும் பலி வாங்கி விடுகிறார்கள். தொய்வான முன் பகுதியில் "கவுன்ஸிலிங்" ஒட்டி சில காட்சிகள் அமைத்திருந்தால் படத்தின் கரு என்ன என்பது அழுத்தமாக பதிந்திருக்கும்.
<strong>வித்தியாசமான ஏமாற்றாத முடிவு. </strong>
Srikanth, Samvrutha நடிப்பை பற்றி எல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. கதைக்கு
பொருந்துகிறார்கள். அவ்வளவே!
பொருந்துகிறார்கள். அவ்வளவே!
அந்த குட்டிப்பெண் ஒரு எக்ஸ்ட்ரா என்ற அளவில் நினைத்துக்கொண்டிருக்கையில் கடைசி
காட்சியில் மிக எதார்த்தமாக நடித்து ஸ்கோர் பிண்ணிவிடுகிறது.
காட்சியில் மிக எதார்த்தமாக நடித்து ஸ்கோர் பிண்ணிவிடுகிறது.
சங்கீதாவுக்கு நடிகை என்றளவில் மறுபடியும் ஓரு வாய்ப்பு. சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பிதாமகனிலேயே எனக்கு நடிக்கவும் தெரியும் என்று காண்பித்துவிட்டார். இப்படத்தில் இன்னும் இளைத்து அழகாக இருக்கிறார்.
ஏற்கனவே ரம்யா படையப்பாவில் மிரட்டிவிட்டதால் சங்கீதாவின் அலப்பறைகளும் மானரிஸமும்
புதிதாக இல்லை. வில்லி என்பதற்காக சாய்வான காமிரா கோணத்தில் முடிகள் முன்னே விழ சங்கீதா காட்டப்படுகிறார். பார்க்க பூணை போல இருக்கிறார். ஓரு பூணையையும் பயன்படுத்தியிருந்தால் ஒரு திரில்லர் எஃபெக்ட் கிடைத்திருக்கலாம்.
புதிதாக இல்லை. வில்லி என்பதற்காக சாய்வான காமிரா கோணத்தில் முடிகள் முன்னே விழ சங்கீதா காட்டப்படுகிறார். பார்க்க பூணை போல இருக்கிறார். ஓரு பூணையையும் பயன்படுத்தியிருந்தால் ஒரு திரில்லர் எஃபெக்ட் கிடைத்திருக்கலாம்.
சங்கீதாவுக்கு கற்பனையில் Srikanth-உடன் கவர்ச்சி நடனம் இல்லை என்பது ஆறுதல்.
"வாலி" பார்த்த பின் எத்தனை கொழுந்தன்மார்களை பெண்கள் சந்தேகத்துடன் பார்த்து பயந்தார்கள் என்ற புள்ளிவிவரம் இல்லை. அதேபோல "உயிர்" பார்த்துவிட்டு சமூகம் கெட்டுவிடும் என பயப்படத் தேவையில்லை. ஆனால் வழக்கம் போல தடை செய்ய வேண்டும் என்று வேகமாக புறப்பட்டு படத்துக்கு இலவச விளம்பர கிடைக்க செய்துவிட்டார்கள்.
கம்பி மேல் ரகம் என்பதால் விரசம் தோன்றிவிடாதடி ஜாக்கிரதையாகவே எடுத்திருக்கிறார்கள். அதற்காகவே இயக்குனர் சாமியை பாரட்டலாம்.
"உயிர்" - ஒரு "subject" என்றளவில் பார்க்கலாம். தமிழர்களுக்கு இந்த சைக்கோத்தனமான காரெக்டர்கள் புதுசு. தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்று புரிந்து கொள்ள இப்படம் உதவும். "உறவுகளில் கூட எல்லையிருக்க வேண்டும்" என எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
மற்றவர்கள் தவிர்க்கவும்.
சன் டிவி ஸ்டைலில்:
உயிர் - கெட்டியான தயிர். சிலருக்கு ருசிக்கலாம். சிலருக்கு புளிக்கலாம்!
Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக