புதன், ஏப்ரல் 05, 2006

தவசி - திரைப்பட விமர்சனம்

நண்பர்களுக்கான தனிச்சுற்றில் தவசி படம் வெளிவந்த போது எழுதிய விமர்சனம். அப்பொழுது டான்சி தீர்ப்பால் ஜெ பதவி இறக்கப்பட்டு பன்னீர் செல்வம் முதல்வராயிருந்தார்.

அதில் விஜய்காந்த் அரசியலுக்குள் நுழைவதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதாக உடுக்கை அடித்தேன். அது நிஜமாகி விட்டது. இங்கு மறு பதிவு செய்கிறேன்.

ஊருக்கு நாட்டாமை. அவர் தவசி. தவசியாகவும் தவசியின் பொஞ்சாதியாகவும் வேட்டி கட்டுன விஜயகாந்தும், பாவப்பட்ட ஜெயசுதாவும். அவர்களுக்கு மகனாக பேண்ட்டு போட்ட விஜயகாந்தும் (விஜய் நடித்திருக்கலாம்!) அவருக்கு நிச்சயம் பண்ணிய மருமகளாக வீணடிக்கபட்ட சவுந்தார்யாவும். சவுண்டு அழகு அழகு தான். (திருந்தவே மாட்டீங்களா?)

தவசியின் மச்சான் நாசர் முத்துக்கருப்பன் மாதிரி சவுடாலா திரியரார். அவருக்கு ஒரு பையன் (பேரெல்லாம் கேட்கக்கூடாது!) ஒரு பொண்ணு (பிரதியுக்க்ஷா, லைலா மாதிரி இருப்பதாக சில பேர் ரசிச்சிக்குறாங்க. சத்தியமா நான் இல்லை. உங்களுக்கு எப்படியோ...) தவசி ஒரு தீர்ப்பில் நாசர் மகன் வண்ணானை அடித்துவிட்டதாக சொல்லி அவன் இன்னும் ஒரு
வருடத்திற்கு ஊர் மக்கள் துணியெல்லாம் துவைக்கணும்னு சொல்கிறார். (யாரோ தவசி தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு கத்தறமு கேட்குது... ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க!) வாஷிங் மிஷின் வந்ததெல்லாம் அவருக்கு தெரியாதோ? அந்த பையன் அவ்வளவு புத்திசாலி இல்லை. ஊரு துணியெல்லாம் கிழிச்சிர்றான். (ஆளை விடுங்க சாமிகளா. நல்லவேளை அதுக்கு ஒரு பஞ்சாயத்து இல்ல!)

இன்னொரு தீர்ப்பில் தவசி, கோயில் நகையை திருடிட்டான்னு ஒருத்தரை பழி சொன்னதால அவன் தற்கொலை பண்ணிக்கிறான். அந்த பையன் யாருன்னா நம்ம நாசருக்கு நிச்சயம் பண்ணிய பையன். பேண்ட்டு போட்ட விஜயகாந்துக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்கிற அன்னைக்கு நாசர்
முரசொலி மாறன் மாதிரி திடும்னு வந்து தவசியை கேள்வி கேட்கிறார். தவசியும் வழக்கம் போல வைகோ மாதிரி உணர்ச்சிவசப்பட்டு (இது இப்போ சேர்த்தது) தன்னோட பையனை செத்துப்போன பையனோட அம்மாவுக்கு தத்து கொடுத்திறார். கல்யாணம் நின்னு போகுது. சவுண்டும் நான்
"அக்காவோடயே இருந்திறேன்" மாதிரி தவசியோட வீட்டிலேயே இருந்துறராங்க.

தத்து எடுத்த அம்மாவும் அவரோட பெண்களும் பேண்ட்டு போட்ட விஜயகாந்தை கொடுமை படுத்துறாங்க. அவர் அதையெல்லாம் சகிச்சிகிட்டு நல்லதாகவே செய்றார். ஜெயலலிதா பன்னீர் செல்வம் தான் தற்காலிக முதல்வர்னு அறிவிச்சப்பிறகும் கலைஞர் அவரே நிரந்தர முதல்வர்னு தேவர் சமூகத்திற்கு வாக்கு கொடுப்பாரானு விவகாரமா கேள்வி கேட்ட மாதிரி நாசர் பேண்ட்டு போட்ட விஜயகாந்து இப்ப உங்க பையன் தானே என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு தத்து அம்மாகி்ட்ட சொல்றார். தவசி ஜெ மாதிரி பதில் அறிக்கை கொடுக்காம தத்து பையன் என் பையன்
இல்லைன்னு சொல்லி கண்டுக்காம விட்டுடறாரு. இங்கே புது ஜோடிக்கு ஒரு டூயட்டு.

கல்யாண ஏற்பாடு ஒரு பக்கம் நடக்க சவுண்டு மருந்து குடிச்சுறார். பேண்ட்டு போட்ட விஜயகாந்து வந்து காப்பாத்தி ஆஸ்பத்திரியில் கொண்டு போடுகிறார். அங்கே அவர் உண்மையான கோயில் நகை
திருடனை பார்த்திறாரு. இதுக்கெல்லாம் காரணமான ஒசாமா நாசர்னு கண்டுபிடிக்கிறார். அப்புறம் கதை எப்படி போகும். அம்மாவுக்கு டான்ஸி தீர்ப்புனா கொண்டாட்டம் தானே. நம்ம எதிர்பார்ப்பை வீணடிக்காம ஒரு பைட் ஒரு கெஞ்சல் ஒரு மன்னிப்பு மறுபடியும் கொஞ்சல் அப்படின்னு படம் ஒரு
வழியா முடியது.

தவசிக்கு வாக்கு தான் முக்கியமே தவிர அவர் ஆராயம கொடுக்கிற தீர்ப்பின் பின் விளைவு முக்கியமல்ல. என்ன தர்மமோ? இதிலே தர்மருக்கே தர்மம் சொல்லிதந்த மகராசான்னு நமக்கு தெரியாத மகாபாரத உண்மையெல்லாம் பாடுறாங்க.

"துளசி வாசம் மாறுனாலும் தவசி வாக்கு மாற மாட்டான்" படத்தோட பஞ்ச் டயலாக். நம்ம தீர்ப்பு என்னான்னா "துளசியே வாசம் மாறினாலும் பார்க்க வேண்டிய படம் இல்லை"

அந்த காந்த் அரசியலுக்கு வாராறோ இல்லியோ இந்த காந்த வந்திருவாரு போலிருக்கு. அடுத்த படம் பேரு ராஜ்ஜியம். இமேஜ் எல்லாம் பில்ட் பண்றாரு. பாவம் தமிழ் ரசிக கோடிகள்.

நில்லுங்க. எங்கே போறீங்க? தியேட்டருக்கா? திருட்கு விசிடி வாங்கவா? இவ்வளோ விமர்சனம் படிச்ச பிறகும் உங்களுக்கு ஆவலா?

நில்லுங்க. டாய்... டேய்...

I love you guys.

கருத்துகள் இல்லை: