திங்கள், ஏப்ரல் 03, 2006

முதலிடத்தில் தினகரன்?

1 ரூபாய் தினகரன் காகித தரத்தில் நன்றாக இருக்கிறது. உள்ளடக்கத்தில் இப்போதைக்கு நடுநிலையாக செய்திகள் தருவது போல எல்லாத தரப்பு செய்திகளும் இருக்கிறது.

ஒரு மில்லியன் காப்பிகள் விற்பதாக ஆங்கிலத்திலும் பத்து லட்சம் என்பதாக தமிழிலும் விற்று நம்பர் 1 என்று விளம்பரங்கள். (தினத்தந்தி தினமும் 1 கோடி விற்பதாக விளம்பரம் செய்துகொள்கிறது. தினத்தந்தி உலக வாசகர்கள் அனைவரையும் கருத்தில் கொள்கிறது. தினகரன் எந்த கணக்கில் ஒரு மில்லியன் என சொல்லவில்லை. )

அவர்களின் அசுர விளம்பர பலம் பத்திரிக்கைகளை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. காலைச்செய்திகளில் தினகரனுக்கும் மாலையில் தமிழ் முரசுக்கும் சன் ஸ்க்ரோல் போடுகிறுது.

இப்போதைக்கு பொட்டலம் மடித்துக்கொடுக்க பழைய பேப்பர் வாங்குபவர்கள் தினமும் செய்திகளும் இலவசம் என்பதால் கண்டிப்பாக வாங்குவார்கள்.

3 கருத்துகள்:

தயா சொன்னது…

செய்திகள் கவரேஜில் நடுநிலை என்பது ஒரு தோற்றம் தான். அதை செய்வதில் சமர்த்தர்கள். இப்படித்தான சன் டிவியின் செய்திகளும் இருந்தது.

ஹைதராபாத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸெ ஒரு ருபாய் தான் விற்கிறது. இதற்கும் காரணம் டெக்கான் குரோனிக்கல் என்று தான் நினைக்கிறேன். குற்றம் சொல்ல முடியாது தான்.

கண்டிப்பாக மற்ற பத்திரிக்கைகளும் தங்கள் விலையை குறைக்க வேண்டிவரும். கூடவே செய்திகளின் தரமும் அதற்கான பக்கங்களும். விளம்பரங்களே பெரும்பாலும் ஆக்ரமித்து உண்மையிலேயே பொட்டலம் மடிக்க தான் லாயக்கு என்பதாகிவிடும்.

லக்கிலுக் சொன்னது…

தினமலர் மற்றும் தினத்தந்தி கட்சி சார்பானதாக மாறிப்போய் நடுநிலை வேஷம் போடுவது மக்களை வெறுப்படையச் செய்திருக்கிறது....

ஆனால் தினகரனோ கட்சி சார்பு என்று தெரிந்தும் கூட செய்திகளில் நடுநிலை பேணுவது பாராட்டத்தக்கது...

தினமலர், தினத்தந்தி அராஜகத்தை உடைக்காவாவது தினகரன் 2 மில்லியன் சர்க்குலேஷனை விரைவில் எட்ட வேண்டும்....

மாயவரத்தான் சொன்னது…

இதுக்கு பேசாம முரசொலி 2 மில்லியன் எட்ட வேண்டும் என்று வாக்குறுதி எடுத்திருக்கலாம் லக்கி.

நல்லா வாயிலே வருதுய்யா.